சத்தமில்லாமல் சுத்தம்

சிலாங்கூர் மாநில அரசு மக்களின் நன்மைக்காகவும் பாதுகாப்புக்காகவும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது. மக்கள் இதைப்பின்பற்றினால் தொற்றுத்தன்மையை விரைவாக மாற்றியமைக்கலாம் என்று அறிவித்திருக்கிறது.

அறிவிப்புக்கு முன்னமே அங்காடிக்கடைகள் அஸ்தமித்துவிட்டன. இது நல்ல அறிகுறி. சாலைப்பகுதிகளை அடைத்துக் கொண்டிருந்த கடைகள் செயல்படவில்லை. சாலைகள் இடையூறு இல்லாமல் இருக்கின்றன. கடைத்தெருக்களில் விபரீத நிறுத்தம் இல்லை.

நள்ளிரவு வரை நேரம் கொடுக்கப்பட்டிருந்தாலும் சில நடவடிக்கைகள் முன்பாகவே நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உணவுக்கடைகள், வண்டி வாகன வியாபாரங்களுகுத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் நன்மை கருதியே தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பதில் திருப்தியடையலாம்.

மொத்த விலைச் சந்தைகள் காலை 5 மணியிலிருந்து மாலை 4 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. கார் இழுவை வண்டிகள் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை மட்டுமே செயல்பட முடியும்

வீட்டுக்கொருவர் மட்டுமே பொருள் வாங்கச் செல்லமுடியும். பலர் செல்ல வேண்டியிருந்தால் சரியான விளக்கம் தரவேண்டும்.

வாகனப் பட்டறைகள் மாலை 4 மணிவரை திறக்கப்படும். இதில், சலவை இயந்திரங்கள், கார்கழுவும் இடங்களுக்கு அனுமதி இல்லை. பெட்ரோல் நிலையங்களுக்கு மட்டும் தடையில்லை. அதில் செயல்படும் கடைகளுக்கு நள்ளிரவுக்குபின் வாய்ப்பில்லை.

மொத்தத்தில் லஞ்சம் ஒழிந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here