கொரோனா: காக்பிட் அறையில் இருந்து குதித்த விமானி

பயணிக்கு கொரோனா இருப்பதாக சந்தேகத்தின் பேரில் காக்பிட் அறையில் இருந்து விமானி கீழே குதித்து உள்ளார்.

புனே,மார்ச் 23-

எங்கும் கொரோனா எதிலும்கொரோனா உலக மக்களை பீதி ஆட்கொண்டுள்ளது.

புனோலிருந்து டெல்லி சென்ற ஏர் ஏசியா விமானத்தில் கொரோனா பாதிப்புடன் வெளிநாட்டு பயணி ஒருவர் பயணம் மேற்கொண்ட தகவல் விமானிக்கு கிடைத்து உள்ளது. தனக்கு முதல் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த குறிப்பிட்ட நபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நினைத்து சந்தேகத்தின் பேரில், மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தின் பின்வாசல்வழியாக கீழே இறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விமானி முன்வாசல் வழியாக இறங்க வேண்டும் அல்லது அவசரவழியாக இறங்க வேண்டும். எனவே, அவர் விமானி ஓட்டி அறை வழியாக கீழே குதித்துள்ளார்.

இதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.அதன்பின், அந்த குறிப்பிட்ட நபரை மருத்துவ குழுவினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர் ஆனால் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here