PH -BN இணையில் கெடா மாநிலத்தை கைப்பற்றுவோம்; பிரதமர் நம்பிக்கை

பாங்கி,வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் பெரிகாத்தான் நேஷனல் (PN) கட்சியிடமிருந்து கெடாவை பக்காத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் (PH) கூட்டணி கைப்பற்றும் என்று பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்றிரவு ‘மெகா மடானி சுற்றுப்பயணத்தை’ தொடக்கி வைத்து பேசிய அன்வார், இங்கு வெற்றி பெற்றால் PN ஆளும் மாநிலங்களான கெடா, கிளந்தான் மற்றும் தெரெங்கானுவின் பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார்.

கெடா PH மற்றும் BN இன் கோட்டை. அதை எளிதாகப் பிடிக்க முடியும். மற்ற மாநிலங்களில், இது ஒரு வலுவான சண்டையாக இருக்கும் என்று அவர் தனது உரையில் கூறினார்.

நாம் ஏன் (மூன்று மாநிலங்களை) கைப்பற்ற விரும்புகிறோம்? பொருளாதாரம். இப்போது அவர்களின் பொருளாதார நிலை என்ன? மிக மோசமானது. டெஸ்லாவின் எலன் மஸ்க் போன்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்துகிறோம் என்பதை தேசிய ஒற்றுமை அரசாங்கம் காட்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் சிலாங்கூர் மாநிலத் தேர்தலுக்கான தேர்தல் இயந்திரத்தை நேற்று இரவு தொடங்கின. கெடா, நெகிரி செம்பிலான், பினாங்கு, சிலாங்கூர், கிளந்தான் மற்றும் தெரெங்கானு ஆகிய மாநிலங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 12 அன்று தங்கள் மாநிலத் தேர்தல்களை நடத்துகின்றன.

கடந்த ஆண்டு 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கு கூட்டணியில் இணைந்ததில் இருந்து, முன்னாள் போட்டியாளர்களான BN மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இணைந்து போட்டியிடும் முதல்  தேர்தல் இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here