தமிழகத்தில் முதல் கொரோனா பலி!

மதுரை நபர் உயிரிழந்தார்!

மதுரை –

கொரோனா கிருமித் தொற்றால் தமிழகத்தில் முதல் நபர் உயிரிழந்துள்ளார்.
அவர் மதுரையைச் சேர்ந்தவர். அவர் எந்த வெளிநாட்டுக்கும் வெளி மாநிலங்களுக்கும் செல்லாதவர் என்றும் அவருக்கு எப்படி கொரோனா வைரஸ் தொற்று பரவியது என்பதே பெரிய மர்மமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும் அவர் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கெனவே சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் எந்த சிகிச்சையையும் அவரின் உடல் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் மரணமடைந்தார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு முதலாவதாக ஒருவர் பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனாவால் மரணமே இல்லாமல் இருக்க வேண்டும் என்று அரசு தீவிர நடவடிக்கை எடுத்தபோதிலும் ஒருவர் மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here