பெட்டாலிங் ஜெயா, மார்ச் 27-
இன்றைய முதல்தேவை மக்களுக்கான அதியாவசியப் பொருட்கள். மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு இப்பொருட்கள் தடையின்றிக் கிடைக்கும் வழி செய்தல் அரசின் கடமையாக இருப்பதால் வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் வந்தடைய வேண்டும். இதற்கான கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டால்தான் இது சாத்தியமாகும்.
இப்பொருட்கள் வந்திறங்க நாட்டின் முக்கிய துறைமுகங்களுக்கு விலக்கு அளிக்ககப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.
இதனால் பொருட்கிடங்குளிலிருந்து விநியோகம் செய்யும் வாகனங்கள் இன்று முதல் 29-ஆம்நாள் வரை 24 மணி நேரமும் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்ங்ர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர்தம் அறிக்கையில், போர்ட் கிள்ளான், பாசீர் கூடாங், பினாங்கு துறைமுகங்கள் விலக்கு அளிக்கப்பட்ட துறைமுகங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.