கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் மனிதாபிமான உதவி

கோவிட்-19 வைரஸ் உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் இவ்வேளையில் ஆலயம் வழிப்பாட்டு தளமாக மட்டுமல்லாமல் சமூக கடப்பாடுடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் தினமும் வசதிக் குறைந்தவர்களுக்கு உணவு பொட்டல்கள் வழங்கப்பட்டு வருவதாக ஆலயத் தலைவர் சங்கரத்னா சித.ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.

மக்கள் நடமாட்ட தடை உத்தரவினால் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக வசதி குறைந்தவர்கள் இந்த காலக்கட்டத்தில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். பி40 தரப்பினருக்கு உதவிடும் பொருட்டு மிகவும் அத்திவாசியமான உணவினை வழங்கி வருகிறோம். கிள்ளான், போர்ட் கிள்ளான் ஆகிய வட்டாரங்களில் வசதி குறைந்தவர்கள் பலர் இருக்கின்றனர்.

பசியால் யாரும் கஷ்டக்கூடாது என்ற நோக்கில் ஆலயத்தின் சார்பில் தினம் 500 உணவு பொட்டல்கள் தயார் செய்யப்பட்டு எங்கள் ஆலய தொண்டூழியர்கள் வழி வசதி குறைந்த குடும்பங்களுக்கு நேரடியாக சென்று வழங்கி வருகிறோம் என்கிறார் சித.ஆனந்தகிருஷ்ணன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here