தலைநகரில் சாலைத்தடைகள்

தலைநகரில் சாலைத்தடைகள்

கோலாலம்பூர், மார்ச் 29-

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் (எம்சிஓ) தலைநகரில் மேலும் நான்கு சாலைகளைப் போக்கு வரத்துக்குத் தடை விதித்திருக்கிறது என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ மஸ்லான் லாஸிம் தெரிவித்திருக்கிறார்.

மக்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும். அப்போதுதான் தொற்றிலிருந்து விடபட முடியும். ஆனாலும் மக்களின் நடமாட்டாம் கட்டுப்படுவதற்கான நிலைமையை மக்கள் புரிந்துகொள்ளவில்லை.

அதனால் எங்கள் கடமையில் கண்டிப்பாக இருக்க வேண்டியதாக இருக்கிறது என்றார் அவர்.தலைநகரில் டாங் வாங்கி, பிரிக்பீல்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் இந்தத் தடை அமலில் கொண்டு வரப்படுகிறது என்றார் அவர்.

இந்தத்தடை அமலில் இருந்த காலத்தில் நடமாட்டதிற்குக் கட்டுப்படாமல் இருந்த 19 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களோடு 43 பேர் கைது செய்யப்பட்டிருப்பதை அவர் தெரிவித்தார்.

இவர்களில் 13 பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இதுபோல் உத்தரவை மதிக்காதவர்களும் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here