காவல் அதிகாரியை பார்த்து முட்டாள் என்று கூச்சலிட்ட பெண் கைது

பெட்டாலிங் ஜெயா:

இங்கு சாலைத் தடுப்புப் பணியை நிர்வகிக்கும் காவல்துறையினரை பார்த்து கூச்சலிட்ட ஒரு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை (எம்.சி.ஓ) அமல்படுத்த பெர்சிராயன் சூரியா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாலை தடுப்பு சோதனையின் போது சிக்கிய நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகளில் இந்தப் பெண் ஒருவராவார்.

பெட்டாலிங் ஜெயா ஒ.சி.பி.டி உதவி ஆணையர் நிக் எசானி முகமட் பைசால் சாலை தடுப்பு சோதனையை அமைத்ததாகக் கூறினர், ஏனெனில் பலர் இன்னமும் தங்கள் வீடுகளிலிருந்து பொருட்களை வாங்குவதற்காக செல்கிறார்கள்.

“கோத்தா டாமன்சாராவில் வசிக்கும் சிலர் தாமான் மெகா சந்தையில் தங்கள் மளிகை பொருட்களை வாங்க விரும்புகிறார்கள். எங்களால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களுக்கான தேவைகளை உங்கள் பகுதியிலேயே வாங்கி கொள்ளுங்கள்.

செவ்வாயன்று (மார்ச் 31) சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உங்கள் அருகிலுள்ள அனைத்து கடைகளும் மூடியிருந்தால் இதுபோன்ற காரணங்களை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

சாலைத் தடுப்பை கடந்து செல்லும்போது காவல்துறையினரை பார்த்து 30 வயது மதிக்கதக்க முட்டாள்கள் என கூச்சலிட்டதால் அப்பெண்ணை அவர்கள் கைது செய்ததாக அவர் கூறினார். அவள் எங்களை முட்டாள்கள் என்று அழைத்தார். சரி, நாங்கள் எங்கள் இதயங்களிலும் மனதிலும் உங்கள் பாதுகாப்பைக் கொண்ட முட்டாள்கள்தான்.

நாங்கள் அப்பெண்ணை கைது செய்து மேல் விசாரணைகளுக்காக மீண்டும் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்து வந்தோம் என்று அவர் கூறினார்.
பெர்சியரன் சூரியா சாலை தடுப்பை தவிர, மாவட்டம் முழுவதும் 11 சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஏ.சி.பி நிக் எசானி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here