கோலாலம்பூர்:
கோலாலம்பூரின் ஜாலான் முன்ஷி அப்துல்லாவில் உள்ள மெனாரா சிட்டி ஒன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தேவையான உணவுப் பொருட்களைப் பெற்று வருகின்றனர் என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 2) பிற்பகல் சமூக நலத் துறை தெரிவித்தது.
அரசாங்கம் இரண்டாம் கட்ட MCO (மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை) அறிவித்தவுடன் பல குடியிருப்பாளர்கள் குறிப்பாக வெளிநாட்டினர், அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களை வாங்க வெளியில் செல்கின்றன என்று அறியப்படுகிறது. அதன் விளைவாக அங்கு வசிக்கும் 17 பேருக்கு கோவிட் -19 உறுதி செய்யப்பட்டது.
அதனால் ஏப்ரல் 13 வரை, உணவு விநியோக சேவை ஊழியர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே செல்லவோ வெளியே வரவோ முடியாது, அவர்கள் கூட உணவை வரவேற்பறையில் மட்டுமே வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
கட்டிட மேலாளர் டாவுட் அன்சாரி கூறுகையில் மக்கள் நடமாட்ட தடை அறிவித்த நிலையிலும் பல குடியிருப்பாளர்கள், குறிப்பாக முதியவர்கள் உணவுப் பொருட்களை வாங்க வெளியேறுகிறார்கள் என்றார்.
“மக்கள் எப்போது உணவுப் பொருட்களைப் பெற முடியும் என்பது குறித்த தகவல்களைக் கேட்டு எங்கள் அலுவலகத்தை அழைத்தார்கள், ஆனால் அந்த நேரத்தில் என்னால் அவர்களுக்கு உதவ முடியவில்லை. “அதிர்ஷ்டவசமாக, இன்று பிற்பகல் மிகவும் அத்திவாசியப் பொருட்கள் வந்து தேவையானவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
சூழ்நிலையின் காரணமாக, உணவு விநியோகத்தில் உதவுவதற்கு நிர்வாகத்தால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை என்று டாவுட் கூறினார். “எங்களிடம் பாதுகாப்பு வசதி இல்லை, ஆனால் கட்டிடத்தின் 7ஆவது மாடியில் சமூக நல இலாகா அதிகாரிகளுக்கு வழிகாட்டுமாறு எங்கள் பாதுகாப்பு காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் உணவுப் பொருட்களை அந்த இடத்திலிருந்து குடியிருப்பாளர்களுக்கு விநியோகிப்பார்கள் என்று கூறினார்.
“வைரஸைக் கட்டுப்படுத்துவது எங்கள் முன்னுரிமை, நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத் தலைவர் டத்தோ நோர் ஹிஷாம் அஹ்மத் தஹ்லான், நெருக்கடி மேலாண்மைக் குழு மெனாரா சிட்டி ஒன் நிலை குறித்து கலந்துரையாடுவதாகவும் பின்னர் இது குறித்த புதிய தகவல்களை வழங்கும் என்றும் கூறினார்.
இரண்டாம் கட்ட MCO இக்கட்டடத்தில் 502 வீடுகளும் 3,200 குடியிருப்பாளர்கள் தங்கியிருக்கின்றனர். குடியிருப்பாளர்களில் குறைந்தது 70 விழுக்காட்டினர் வெளிநாட்டினவர் என்பது குறிப்பிடத்தக்கது.