‘Jom e-Bill Air Selangor’ போட்டி கால அவகாசம் நீட்டிப்பு

கோலாலம்பூர்,ஜூன் 11-

கடந்த ஜனவரி 1ஆம் தேதி ஆயர் சிலாங்கூர் (Air Selangor) நீர் விநியோக நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப்பட்ட ‘Jom e-Bill Air Selangor’ போட்டியின் கால அவகாசம் வரும் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தப் போட்டி கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி முடிவுறத் திட்டமிடப்பட்டிருந்தது. இதில் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வழக்க வாடிக்கையாளர்கள் இதர வாடிக்கையாளர்களை மின்னியல் கட்டண முறையில் இணைத்துக்கொள்வதன்வழி தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

அதில் முதல் பரிசாக வெளிநாட்டுக்குச் செல்ல  பயண டிக்கெட் வழங்கப்படும் வேளையில், சிறப்பு அம்சமாக அதிர்ஷ்டக் குலுக்கலில் மைவி காரும் பரிசாக வழங்க வகை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் பங்கெடுத்துப் பரிசுகளைப் பெற இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செயல் படுத்தப்பட்ட வாட்ஸ்அப் மூலம் மாதாந்திர கட்டண விவரங்களைப் பெற தேர்ந்தெடுக்கப்படும்

வாடிக்கையாளர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ள வழி விடப்படுகின்றது என அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மாதாந்திர கட்டண விவரங்களைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் முன்னதாக இ-பி (e-bil) செயல் முறையில் பதிவு செய்து https://update.airselangor.com என்ற அகப்பக்கத்தில் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.

சிலாங்கூர் மாநிலத்தில் நவீன ணிறையில் இது குறித்த விவரங்களை செயல்படுத்த கடந்த ஜனவரி 2018 ஆம் ஆண்டு ணமுதல் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இந்த இ-பில் செயல்முறையை செயல்படுத்தி வருகின்றது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப், மின்னஞ்சல் அல்லது பிரத்தியேக செயலி மூலம் தங்கள் மாதாந்திர நீர் விநியோகக் கட்டண விவரங்களைப் பெறலாம். எனவே, வாடிக்கையாளர்கள் விவேகக் கைப்பேசியில் இந்தச் ச்செயலியை பதிவிறக்கம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இது குறித்து மேல் விவரங்கள் அறிய அவர்கள் 15300 என்ற எண்ணை அழைத்து தகவல்களைப் பெறலாம்.

அதோடு 019-2800919 அல்லது 019-2816793 என்ற எண்களுக்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்புவது மட்டுமன்றி www.airselangor.com என்ற அகப்பக்கத்தையும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களையும் வலம் வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here