கோலாலம்பூர், ஏப்ரல் 4-
உயர்க்கல்வி மாணவர்கள் தங்கியிருக்கும் வளாகத்திலிருந்து வெளியேறக்கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது.
மக்கள் நடமாட்டக்கட்டுப்பாடு அமலில் இருக்கும் இவ்வேளையில் தங்கள் ஊருக்குத் திரும்புவது சரியான முடிவாக இருக்காது என்று உயர்க்கல்வி ஆணையம் தெரிவித்திருக்கிறது.
தங்கள் பிள்ளைகளை கல்விக் களத்திலிருந்து வெளியேற்றி சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதிக்கும்படி பெற்றோர் கேட்டுக் கொண்டதை கல்வி ஆணையம் நிராகரித்தது.
தேசிய பாதுகாப்புக்கு இணங்க ஊருக்குத் திரும்புபவதை ஏப்ரல் 14 வரை ஒத்திப்போடவும் தனிமைப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் இக்காலத்திற்கேற்ப பயிற்சிகளையும். ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
பல சூழ்நிலைகளில் கல்விக் கழங்களில் இணைந்திருப்பதே சரி என்றும் மாணவர்கள் கருதுகின்றனர். மாணவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.