மலேசியாவில் வசிப்பவர்கள் கோவிட் -19 கண்காணிப்பை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்கள்

கோலாலம்பூர்: கொரோனா வைரஸின் பரவலைக் குறைக்க மலேசியா மக்கள் நடமாட்ட தடை உத்தரவிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, கட்டுமான மேற்பார்வையாளர் ஹஃபி நஹான் கோலாலம்பூர் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களை வெளியே ஜாகிங் (உடற்பயிற்சி) செய்வதைக் கண்டார்.

அவர் வீட்டில் தங்குவதற்கான தடையை மீறிய நபர்களின் புகைப்படங்களை எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார்.  ஹஃபியின் டுவீட்டர் நண்பர்கள் இவ்விவகாரம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விவரம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் அவ்வட்டாரத்தில்  11 உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களை கைது செய்தனர்.

மக்கள் நடமாட்ட உத்தரவை மீறியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு ஒவ்வொருவருக்கும் நீதிமன்றத்தில் 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரு சிலர் வீட்டிலேயே இருங்கள் என்று வலியுறுத்தி வருவதை  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நான் வருத்தப்பட்டேன் . இவர்கள் நன்கு படித்தவர்கள் என்று தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையை சேர்ந்த 26 வயதான ஹாபி தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் குடிமக்களைக் கொடிய வைரசில் இருந்து மீட்டெடுக்க  வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட சமூகங்கள் கண்காணிப்பு விஷயங்களை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, தனிமைப்படுத்தப்பட்டதாக குறை கூறி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய கணக்கின்படி கொரோனா கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் தோன்றியது – சுமார் 12 லட்சம்  மக்களை பாதித்து 65,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here