நாடென்ன செய்தது நமக்கு நீயென்ன செய்தாய் அதற்கு

கோலாலம்பூர் . ஏப்ரல் 8-

சிறிய,நடுத்தர தொழில்களைக் கைவிட்டு விடமுடியாது என்பதை அரசாங்கமே நன்கு உணர்ந்திருக்கிறது. இதற்கு சாட்சிகளோ ஆதாரங்களோ தேவையில்லை. சிறிய நடுத்தர தொழில்களுக்கு அரசு வழங்கியிருக்கும் தொகை 10 ஆயிரம் கோடி வெள்ளி என்பதே போதுமான சான்றாகும்.

சிறுதொழில்கள் என்பது நாட்டின் உந்து சக்தி. தொழில்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரம். இதில் பாதிப்பு என்றால் அன்றாட நகர்வுகள் அல்லல் பட்டுப்போகும்.
இன்றைய பாதிப்பான சூழ்நிலையில் சிறு நடுத்தர வணிகங்கள்தாம் முதலில் பாதிக்கப்பட்டன. முடங்கத்தொடங்கின.

இத்தொழில்கள் தொடர்ந்து நடைபெற சுகாதாரப்பாதிப்புகளே காரணமாகிவிட்டதால் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்கவேண்டிய அவசியம் உருவாயிற்று.

சிறு நடுத்தர தொழில்களைக் காப்பாற்றுவதினால் இரட்டை நன்மைகள் இருக்கின்றன. ஒன்று தொழில்கள் தொடர்ந்து காப்பாற்றப்படுவது. மற்றொன்று தொழிலாலார்களின் வருமான உத்திரவாதம்.

சிறு தொழில்களை நம்பித்தான் தொழிலாளர்களின் வயிறு நிறைகிறது. தொழிலாளர்களின் நிலை கைவிடப்பட்டால் அது நாட்டின் பாதிப்பைக் காட்டுவதாகவே இருக்கும். அதனால்தான் சிறு தொழில்கள் காப்பாற்றப்பட அவசரம் காட்டப்பட்டது.

சொன்னதைச் செய்கிறார் பிரதமர் சொன்னதைச் செய்வதும் செய்ததைச் சொல்வதும் சரியாக இருந்தால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்துவிடமுடியுமா?
நிச்சயம் முடியும் என்பதற்கு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் ஓர் எடுத்துக்காட்டு.

மக்களின் குரல் காதில் விழுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகள் தேவையில்லை. கொரோனா- 19 பற்றிய தெளிவு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதும் பொய்யல்ல. மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டை மக்கள் உணர்ந்து செயல்படுகிறார்கள் .

மக்கள் நடமாட்டம் குறைந்து வருகிறது என்பதைப் போலீசார் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.அனுபவங்கள் சிறந்த வழிகாட்டியாக இருப்பதால் கற்றுக்கொள்ளும் பொறுப்பில் மக்கள் இருக்கிறார்கள்.

மக்களின் நகர்வுகளைக்கொண்டே இவற்றறைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
துன்பம் வரும்போது தனி ஆளாக ஒன்றும் செய்யவிட முடியாது.

நாட்டிற்கே துன்பம் என்று வரும்போது அரசாங்கத்தாலும் ஒன்றும் செய்ய இயலாது. மக்களின் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் வெற்றிபெறச் செய்ய முடியாது.

அரசு திட்டங்களைக் கூறும்போது அதற்கு இணங்காவிடில் கால விரயம் ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டே சில நகர்வுகள் விரைவாக நடைபெற்றன. ஒரே கல்லில் பல மாங்காய்களை உதிரச்செய்வதுதான் அரசாங்கத்தின் வேலை.

கீழே விழுந்த மாங்காயில் சேதம் இருக்கிறது என்பதல்ல வாதம். மாங்காய்களை உதிர்த்தவர்கள் மீது தவறல்ல. அதில் குற்றம் காண்பதல்ல இப்போதைய வேலை. கிடைப்பதில் திருப்தி கொள்ளல் மட்டுமே முக்கியம்.

இனவேற்றுமையில்லாமல் கொரோனா -19 அனைவரையும் குறிவைத்திருக்கும் நேரத்தில் குறைகளை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, செவிகளை கூர்மையாக்கிகொள்வது சிறந்த செயலாக மதிக்கப்படுகிறது.

புதிய புதிய செய்திகள் வந்துகொண்டேயிருக்கும். விவரம் தெரியாமல் இருந்துவிடக்ககூடாது. அப்படியிருந்தால் விடுபட்டு விடுவோம். விடுபட்டவர்கள் இழப்பைத்தான் சந்திப்பார்கள்.

இன்றைய நிலையில் இழப்பை அதிகம் சந்திக்காமல் மக்கள் நடமாட்டம் இருக்கிறது. இதற்கு அரசின் அக்கறையான பார்வைதான் காரணம். மக்களின் கையில் பணப்புழக்கம் ஈரம் காயாமல் இருக்கிறது. அதைக் காய்ந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.

இதில்,ஒருசிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். சமுதாயம் அவர்களையும் கையோடு இழுத்துக்கொண்டு ஓடித்தான் ஆகவேண்டும்.

பல வகையில் அரசாங்கம் உதவ காத்திருக்கிறது . நாம் அரசாஙத்திற்கு உதவத்தயாராக இருக்கிறோமா?

குற்றமும் குறையும் நமக்கானது அல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here