பெட்டாலிங் ஜெயா:
தீபகற்ப மலேசியாவின் ஆறு மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூரில் இன்று (திங்கள்கிழமை, ஜூலை 27) இரவு 8:00 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பகாங்கின் பெந்தோங் (Bentong), பெரா (Bera), ரொம்பின் (Rompin), சிலாங்கூரின் கோலா சிலாங்கூர் (Kuala Selangor), உலு சிலாங்கூர் (Hulu Selangor), கோம்பாக் (Gombak), ஜோகூர் சிகாமட் (Segamat), மெர்சிங் (Mersing), கோத்தா திங்கி (Kota Tinggi), கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் முழுவதும், பேராக்: உலு பேராக் (Hulu Perak), கோலா கங்சார் (Kuala Kangsar), கிந்தா (Kinta) போன்ற பகுதிகளும் கிளாந்தான்: குவா மூசாங் (Gua Musang), மற்றும் திரெங்கானு: செத்தியூ (Setiu), கோலா நெருஸ் (Kuala Nerus), உலு திரெங்கானு (Hulu Terengganu), கோலா திரங்கானு ஆகிய இடங்களும் இந்த வானிலையை பெரும் என்று அது தெரிவித்துள்ளது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடரக்கூடிய அல்லது மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவை ஏற்படுத்தும் இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படும் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
எனவே வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து, அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரையிலான வேலை முடிந்த பின் வீடு திரும்பும் பரபரப்பான போக்குவரத்து நேரத்தில் இந்த மழைப் பொழிவு அமைவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாகன ஓட்டிகள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





















