நான் கிட்டதட்ட இறந்துவிட்டதாக நினைத்தேன் – மரணத்தை வென்ற இந்திய பெண்

லண்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் அவர் அடைந்த சிரமம் குறித்து கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸலிருந்து 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். இதில் பிரித்தானியாவில் 7,000-க்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அவ்வாறு  குணமடைந்தவர்களில் ஒருவர் தான் வடமேற்கு லண்டனில் வசித்து வரும் ரியா லங்கானி.

இந்தியா வம்சாவளியான இவர் ரியா தற்போது தனது இல்லத்தில் தொடர்ந்து தனித்து இருப்பதையே பின்பற்றி வருகிறார். இதையடுத்து கொரோனாவில் இருந்து மீண்ட அனுபவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், நான் இன்னும் எனது கணவர் அருகிலோ எனது பெற்றோர் அருகிலோ கூட செல்லவில்லை.

இரவில் உறங்குகையில் சுவாசிப்பதில் இன்னும் எனக்குச் சிக்கல் உள்ளது. கொரோனா தொற்று இருக்கும்போது நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன் என்று நினைத்தேன். எனக்கு சுவாசிப்பதில் அவ்வளவு சிரமம் இருந்தது.

அந்தத் தருணத்தில் எனது குடும்பத்தினருக்கு செய்தி அனுப்ப முடியாத நிலையில் இருந்தேன். ஆனால் தற்போது நான் உயிருடன் இருக்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here