கோலாலாம்பூர் தங்க முக்கோணத்தில் நுழையத் தடை

கோலாலாம்பூர் தங்க முக்கோணத்தில் நுழையத் தடை

கோலாலம்பூர், ஏப்.15-

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டில் கோலாம்பூரின் முக்கிய சாலைகள் மூடல் உத்தரவு விடுக்கப்பட்டிருக்கிறது. தலை நகருக்குள் செல்லும் முக்கிய சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன.

டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகம், டி.பி.கே.எல், தவிர மஸ்ஜித் இந்தியா பகுதி மேம்பட்ட இயக்க கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் நடமாட்ட முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

                                                        தங்க முக்கோணத்தில் நுழையத் தடை

ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், ஜாலான் லெபோ அம்பாங், ஜாலான் துன் பேராக், ஜாலான் டாங் வாங்கி மற்றும் ஜாலான் முன்ஷி அப்துல்லா, ஜாலான் அம்பாங், ஜாலான் மேலகா ஆகிய வளாகங்கள் மூடப்பட்டன.

பல ஹோட்டல்களைத் தவிர, செமுவா ஹவுஸ், மைடின், கோம்ப்ளெக்ஸ் கேம்பல், விஸ்மா கோசாஸ், விஸ்மா யாக்கின் ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிக்குள் இருக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதி சுமார் 1 கி.மீ சுற்றளவு கொண்டதாக் இருக்கின்றன. இவ்வட்டாரத்தில் , 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர், இதில் சிலாங்கூர் மேன்ஷன், மலாயன் மேன்ஷன் அடுக்ககங்களில் 6,000 , மேனாரா சிட்டி ஒன் பகுதியில் 3,200 பேர் குடியிருக்கின்றனர்.

மஸ்ஜித் இந்தியா மீது மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு அந்தப் பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் செல்வது தடைசெய்வதாக மாற்றப்பட்டிருக்கின்றன.
அந்தப் பகுதியிலுள்ள பாதைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here