உள்நாட்டு அரிசி உச்சவரம்பு விலையை கிலோவுக்கு 3.40 ரிங்கிட்டாக அதிகரிக்க வேண்டுமா? முடியாது விவசாய அமைச்சு திட்டவட்டம்

கோலாலம்பூர்:

உள்நாட்டு வெள்ளை அரிசியின் விலை கிலோவுக்கு 2.60 ரிங்கிட் எனத் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. உள்நாட்டு வெள்ளை

அரிசியின் உச்ச வரம்பு விலையை கிலோ ஒன்றுக்கு 3.40 ரிங்கிட்டாக அதிகரிக்க வேண்டும் என்ற உள்நாட்டு ஹைபர் மார்க்கெட் மைடின் பேரங்காடியின் நிர்வாக இயக்குநர் டத்தோஅமிர் அலி மைடின் முன்வைத்த பரிந்துரையை அமைச்சு நிராகரித்தது.

உள்நாட்டு வெள்ளை அரிசியின் சில்லறை வியாபாரம் கிலோவுக்கு 2.60  ரிங்கிட்டாகத் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. விலை அதிகரிப்பையும் அனுமதிக்க முடியாது என்று நேற்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அமைச்சு தெளிவுபடுத்தியது.

உள்நாட்டு வெள்ளை அரிசியின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு 10 கிலோ அரிசிக்கு 34 ரிங்கிட் உச்சவரம்பு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று அமிர் அலி மைடின் ஙெ்ப்டம்பர் 27ஆம் தேதி பரிந்துரைத்திருந்தார்.

இந்த விலை அதிகரிப்பின் வழி உற்பத்தியாளர்களின் செலவு கட்டமைப்புகளை மேம்படுத்துவதோடு பற்றாக்குறையைத் தடுப்பதற்கும் உதவும் என்று தம்முடைய பரிந்துரையில் அமிர் அலி மைடின் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது உள்நாட்டு வெள்ளை அரிசி விலை 10 கிலோவுக்கு  தற்போது 26 ரிங்கிட்டாக உள்ளது. ஆனால் உள்நாட்டு வெள்ளை அரிசி விநியோகத்தில் இன்னமும் பற்றாக்குறை நிலவுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here