மனைவியை பிரிய ஜுவாலா காரணமா? விஷ்ணு விஷால் விளக்கம்

விஷ்ணு விஷால்
ஜூவாலா கட்டாவை காதலித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால், தனது மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள விஷ்ணு விஷாலுக்கு 2011-ல் திருமணம் நடந்தது. 2018-ல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். பின்னர் ராட்சசன் படத்தில் ஜோடியாக நடித்த அமலாபாலுடன் இணைத்து பேசப்பட்டார். அதனை இருவரும் மறுத்தனர்.

இந்த நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்பி படங்களை விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதை உறுதிப்படுத்தினார். இதுபோல் ஜூவாலா கட்டாவும், விஷ்ணு விஷாலுடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து காதலில் உருகி வருகிறார். ஜுவாலா கட்டாவை திருமணம் செய்வதற்காகவே தனது மனைவியை விஷ்ணு விஷால் விவாகரத்து செய்தார் என்று இணையதளங்களில் தகவல்கள் பரவின.

இதற்கு தற்போது விளக்கம் அளித்து விஷ்ணு விஷால் கூறும்போது, ‘எனது மனைவியை பிரிய காரணம் ஜுவாலா கட்டா என்று சிலர் பேசுகின்றனர். மேலுல் சிலர் ராட்சசன் படப்பிடிப்பு சமயத்தில் அமலாபாலோடு சேர்ந்து இருந்ததாக சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் பொய். பிரிவுக்கான உண்மையான காரணத்தை என்னால் சொல்ல முடியாது. அது எனது தனிப்பட்ட சொந்த விஷயம்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here