பிறப்பு இறப்புகளைப் பதிவுசெய்ய 90 நாட்கள் அவகாசம்

பெட்டாலிங் ஜெயா : மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டின் உத்தரவின் போது (எம்.சி.ஓ) பிறப்பு இறப்புகளை பதிவு செய்வதை கட்டுப்பாட்டுக் காலம் முடிவடைந்த தேதியிலிருந்து 90 வரை அனுமதிக்கப்படும் என்று மூத்த அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்  தெரிவித்துள்ளார் .

தற்போது, ​​பிறப்பு மற்றும் இறப்புகளை 60 நாட்களுக்குள் அருகிலுள்ள தேசிய பதிவுத் துறையில் (என்.ஆர்.டி) பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் தாமதமாக அபராதம் விதிக்கப்படும்.

இழந்த அடையாள அட்டைகளை மாற்ற வேண்டியவர்கள் அந்தந்த வடாரத்திலுள்ள பதிவகத்தில் என்ஆர்டி கிளைகளை அணுகி அவ்வாறு செய்யலாம் என்று உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.

பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்வதற்கான காலத்தை – மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு காலத்தில் செய்ய முடியாமல் போனால், கட்டுப்பாடு நீங்கிய பிறகு 90 நாட்களுக்குள் பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

பிற நாடுகளில் வசிக்கும் மலேசிய குடிமக்களுக்கு, அந்த குறிப்பிட்ட நாட்டில் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டம் அல்லது பூட்டுதல் முடிவடைந்த தேதியிலிருந்து 90 நாட்கள் காலத்தை கணக்கிடல் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here