பிரச்சினைகள் உள்ள மாணவர்களைக் கண்டறிய நண்பர்கள் அமைப்பு செயல்பட வேண்டும்

கோலாலம்பூர்: மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளில் உள்ள மாணவர்களைக் கண்டறிய பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடையே நண்பர்களின் அமைப்பைச் செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக மலேசியாவின் மருத்துவப்பிரிவின் மனநல மருத்துவ விரிவுரையாளரும் இணை பேராசிரியரருமான டாக்டர் ரோசானிஸாம் ஜக்காரியா கூறுகையில், மக்கள் நடமாட்டஇயக்க கட்டுப்பாட்டு ஒழுங்கை (எம்.சி.ஓ) கையாள்வதில் வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு வழிகளைக் கொண்டிருந்தனர், சில மாணவர்கள் மனச்சோர்வையும் மன அழுத்தத்தையும் கொண்டிருந்தனர்..

உண்மை என்னவென்றால், ஒரு நிகழ்ச்சி அல்லது நெருக்கடியைக் கையாள்வதில் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு திறமைகள் இருக்கின்றன என்று அவர் கூறினார்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுவது முக்கியம் .இதற்கு நண்பர் அமைப்பு உதவும். அதிகாரிகள் அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இதற்கு பொறுப்பேற்பது பயனாக இருக்கும்..

நண்பர்களின் அமைப்பின் பொறுப்பு, மாணவர்களிடையே புரிந்துணர்வை ஊக்குவிப்பதாகும், இதனால், அவர்கள் தங்களுக்குள் மனநலப் பிரச்சினைகளைச் சமாளிக்க நிர்வாகத்திற்கு உதவ முடியும். பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் உளவியல், மனநிலை குறித்து அறிந்து உதவமுடியும்..

இக்காலத்தில் உணவு, பானங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதன் மூலம் இந்த மாணவர்களின் நலனைக் கவனிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.

அதே நேரத்தில், அவர்களின் மனம், உளவியல் தேவைகளையும் கவனிக்க வேண்டும், ஏனெனில் பல்வேறு காரணங்களால் நேர்மறையாக இருக்க முடியாத சிலர் இருக்கலாம்

“ஒரு ஆன்லைன் டெலி-கவுன்சிலிங் அமர்வு நடத்தப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். பல்கலைக்கழக அரங்குகளில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) தையல் செய்வது போன்ற தன்னார்வ நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பதற்றத்தைகத் தவிர்க்கலாம்.

இதற்கிடையில், உணர்ச்சி, மன அழுத்தமும் அடைந்த ஒரு மாணவி, தனியாக, குறிப்பாக இருட்டில் தனியாக இருப்பதற்கு பயந்ததாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here