கொரோனா யாருக்கும் பாகுபபாடு காட்டாது சட்டமும் யாருக்கும் வளையாது

பெட்டாலிங் ஜெயா,ஏப். 23-

சட்டம் தெளிவாக உள்ளது. சட்டத்திற்கு யார் என்பது முக்கியமல்ல, கோவிட் -1 யாருக்கும் பாகுபாடு காட்டாது. பின்னணியை அது கருத்தில் கொள்ளாது என்பதில் மலேசிய இஸ்லாமிய மருத்துவர்கள் சங்கத்தின் (பெர்டிம்) தலைவர் டத்தோ டாக்டர் அஹ்மத் சுக்ரி இஸ்மாயில் உள்ளிட்ட சுகாதார பயிற்சியாளர்களிடையே இது ஒருமித்த கருத்தாகும்.

மக்களைச் சந்திக்க வேண்டிய ஓர் அமைப்பிற்கு தலைமை தாங்குகையில், உடல்நலம் தொடர்பான திட்டங்கள் குறித்த ஆலோசனைகளுக்காக இன்னும் காவல்துறையினரை அணுக வேண்டும்.  எல்லோருடைய நலனுக்காகவும் சமூக இடைவெளியைக் கவனித்தே வேண்டும்.

பூலாவ் தாவார் மாநில சட்டமன்ற முன்னாள் உறுப்பினரான அஹ்மத் சுக்ரி, சிலர் தங்கள் அந்தஸ்தைப் பயன்படுத்துவதும், இயக்கக் கட்டுப்பாட்டு ஒழுங்கை (எம்.சி.ஓ) புறக்கணிப்பதைத் தேர்ந்தெடுப்பதும் அவமானம் என்று சாடினார்.

மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் என். ஞானபாஸ்கரன், மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு கூடல் இடைவெளி ஆணையை அனைவரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், நோய்த் தொற்றிலிருந்து நாடு விடுபட வேண்டும் என்பதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கோவிட் -19 பரவுவதைத் தடுக்க அனைவருக்கும் பங்கு உண்டு என்று வலியுறுத்தினார்.

சட்டத்தை மீறும் எவரும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்.
தண்டனைகளின் அடிப்படையில், அதை நீதிமன்ற முடிவுக்கே விட்டுவிட வேண்டும் என்று அவர் கூறினார்.

தவறு செய்த அமைச்சர்களுக்கு எதிராக பிரதமர் செயல்பட வேண்டும், ஏனெனில் அவர்களின் நடவடிக்கைகள் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கும் பரிந்துரைகளுக்கும் எதிராக இயங்குகின்றன என்று ஓர் அறிக்கை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் கூட்டங்களை தடைசெய்யும் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டை மீறியதாக துணை சுகாதார அமைச்சரான டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி அண்மையில் மன்னிப்பு கோரியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here