காய்கறி வியாபாரிக்கு கோவிட்-19: பெட்டாலிங் ஜெயா மார்க்கெட் மூடப்பட்டது

பெட்டாலிங் ஜெயா –

பெட்டாலிங் ஜெயாவில், ஜாலான் ஓஸ்மானில் செயல்பட்டு வரும் பழைய மார்க்கெட் நேற்று மூடப்பட்டது. இங்கு காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவருக்கு கோவிட்-19 தொற்றுநோய் கண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதால் தொடர்ந்து 5 தினங்களுக்கு இந்த மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

51 வயதான அந்தக் காய்கறி வியாபாரி கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி டிங்கிக் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றார். ஆனால், அவருக்கு கோவிட்-19 தொற்றுநோய் கண்டிருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் உட்பட இந்தப் பழைய மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் 500க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவிருப்பதாக பெட்டாலிங் மாவட்ட நிவாராணப் பேரிடர் நடவடிக்கைக் குழுத் தலைவர் ஜொஹாரி அன்வார் அப்துல்லா கூறினார்.

நாளை முதல் அனைத்து வியாபாரிகளும் கண்டிப்பாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். பெட்டாலிங் ஜெயா, தாமான் மெகாவிலுள்ள காய்கறிச் சந்தை கோவிட்-19 கிருமித் தாக்கத்தால் மூடப்பட்டது.

இப்போது பெட்டாலிங் ஜெயாவில் மூடப்பட்டிருக்கும் இரண்டாவது காய்கறிச் சந்தையாக பழைய மார்க்கெட் விளங்குகிறது. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி செலாயாங் பாசார் போரோங்கில் கிருமித் தொற்றுநோய் அபாயக் கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலுள்ள 8 வீடமைப்புப் பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here