அடுக்ககக் கொள்ளைகள் அம்பலம்

ஜார்ஜ் டவுன், ஏப். 29-

ஓர் அடுக்கக 22 கொள்ளையில் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கடந்த வியாழக்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டார், இக்கொள்ளையின் மதிப்பு  கிட்டத்தட்ட 5 லட்சம் வெள்ளி என கருதப்படுகிறது.

இக்கொள்ளையில்  38 வயதான சந்தேக, மாலை 6 மணியளவில்  கர்னி டிரைவில் உள்ள கர்னி பார்க் அடுக்ககத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக  வடகிழக்கு மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர் சோபியன் சாண்டோங் தெரிவித்தார்.

இக்கொள்ளயில் ஆறு தொலைக்காட்சிகள், ஐந்து வீடியோ சாதனங்கள், 27 மடிக்கணினிகள், 68 கைப்பேசிகள், அடையாள அட்டைகள், பாஸ்போர்ட், பைகள் , 35 சாவிகள் ஆகியவற்றை  போலீசார் பறிமுதல் செய்தனர். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு 160,000 வெள்ளி மதிப்புடையவை  என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அடுக்ககத்தில், திறக்கப்படாத வீடுகளுக்குள் நுழைந்து, விலையுயர்ந்த பொருட்களை திருடி மலிவாக விற்று வந்திருக்கிறார்.

இச்சந்தேக நபரிடம் கிரிமினல் பதிவுகள் ஏதும்  இல்லை, அவர் தனியாக செயல்பட்டு வந்ததாக போலீசார் நம்புகின்றனர்.

மற்றொரு வழக்கில், ஏப்ரல் முதல், தஞ்சாங் டோகாங்கில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்ககத்தில் 13 வீடுடைப்புகளைச் செய்ததாக சந்தேகத்தின் பேரில் இருவருடன் ஒரு பெண் பயிற்சி மருத்துவரையும் போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு சமபவத்தில் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் ஒரு வீட்டிற்குள் நுழைந்த 34 வயது நபரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து  ஒரு பை, பணப்பை, மதிப்புள்ள காலணிகள், டிஜிட்டல் கேமரா ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்..

மேலும், 24 வயதுடைய ஒரு தம்பதியரையும் கடந்த  சனிக்கிழமை காலை 11.20 மணியளவில் அடுக்கக  லிப்ட் முன் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேமிப்பு அறையில் திருடப்பட்ட பொருட்களை மறைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியவந்தது.

தொலைக்காட்சிப்பெட்டிகள், கணினிகள், மின் பொருட்கள்  என 80,000 வெள்ளி  மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here