அடுத்த மாமன்னராக பொறுப்பேற்க தயார் -ஜோகூர் சுல்தான்

JOHOR RULER SULTAN IBRAHIM IBNI ALMARHUM SULTAN ISKANDAR

ஜோகூர் பாரு:

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது தேசியக் கடமைகளை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக ஜோகூர் சுல்தான் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள மாட்சிமை தங்கிய பேரரசருக்கு அடுத்தபடியாக, அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

“இது ஒரு பதவி உயர்வு அல்ல. இது எனது சகோதர ஆட்சியாளர்களின் சார்பாக அடுத்தபடியாக நான் மேற்கொள்ளத் தயாராக உள்ளேன்” என்றும், “மக்கள் நலனே தனது முதன்மையான முன்னுரிமை” என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனினும் ஆட்சியாளர்கள் மாநாட்டின் கூட்டம் முடியும் வரை காத்திருப்பதே சிறந்தது என்று கூறிய சுல்தான் இப்ராஹிம், அது தொடர்பில் மேலதிக விளக்கமளிக்க மறுத்துவிட்டார் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்சியாளர்கள் ஒரு தனித்துவமான தேர்தல் முறையின் கீழ் அக்டோபர் 27 அன்று, நாட்டின் அடுத்த மாமன்னரை தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய மற்றும் 16வது மாட்சிமை தங்கிய பேரரசரின் ஐந்தாண்டு ஆட்சி, அதாவது பகாங்கைச் சேர்ந்த அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் ஆட்சி, அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here