தடைப்பட்ட கால்பந்து லீக் போட்டிகளை நடத்தாமல் விட்டு விடலாம்: ‘பிபா’

லண்டன்,ஏப்ரல் 30-

ஐரோப்பிய லீக், லா லிகா, சீரி ஏ லீக், பிரிமீயர் லீக், பண்டஸ்லிகா என்று வெளிநாடுகளில் நடக்கும் பிரபலமான கிளப் கால்பந்து போட்டிகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலால் பாதியிலேயே நிற்கின்றன.

எஞ்சிய போட்டிகளை மீண்டும் தொடங்க ஒரு சில கால்பந்து சம்மேளனங்கள் முயற்சித்து வருகின்றன. இது குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) மருத்துவ கமிட்டி தலைவர் மைக்கேல் டி ஹூகே கூறுகையில், ‘சாத்தியம் இருந்தால் வரும் நாட்களில் கால்பந்து போட்டிகளை நடத்தாமல் தவிர்க்க வேண்டும் என்பதே எனது பரிந்துரை.

இப்போது கால்பந்து போட்டிகளை தொடங்கினால் அது மிகப்பெரிய ‘ரிஸ்க்’ ஆகி விடும். இந்த சீசனில் மீதமுள்ள ஆட்டங்களை இத்துடன் தவிர்த்து விட்டு, புதிய சீசனுக்கான போட்டிகளை சிறந்த முறையில் தொடங்க தயார்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மீண்டும் விளையாட முடிவு எடுக்கும் முன்பு ஒவ்வொருவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here