கோலாலம்பூர் –
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மஸ்ஜிட் இந்தியா பகுதியில் நேற்று குடிநுழைவு இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள மெனாரா ஒன் சிட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்றுக் காலை தொடங்கி அந்நியப் பிரஜைகளிடம் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
குடிநுழைவு இலாகா, காவல்துறையினர், ராணுவத்தினர், பொது தற்காப்புப் படையினர் மற்றும் சுகாதார இலாகா அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த அதிரடிச் சோதனையில் களமிறங்கினர்.
காலை 8.00 மணி தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் அந்நியப் பிரஜைகளிடம் முறையான ஆவணம் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இது வழக்கமாக நடைபெறும் சோதனைதான் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் காவல்துறையினரின் லோரியில் பல அந்நியப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கிடையே, குடிநுழைவுத்துறை இலாகாவின் தலைமை இயக்குநர் கைருல் ஸைமி டாவுட்டும் இந்தச் சோதனை நடவடிக்கையில் பங்கேற்றார்.