கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் இருந்து மீள அமெரிக்கா அதிக கடன் தொகை பெற உள்ளது. அமெரிக்காவில், கொரோனாவால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்ய அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிதியுதவிகள் பட்ஜெட்டில் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அந்நாடு 3 ட்ரில்லியன் டாலர் கடன் வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது
இதற்கு முந்தைய காலண்டில் அமெரிக்க அரசு வாங்கிய கடனைவிட இது ஐந்து மடங்கு அதிகமாகும். அந்த கடன் தொகை 2008 ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் வாங்கப்பட்டது. 2019 ஆண்டு முழுமைக்கும் சேர்த்து அமெரிக்க அரசு வாங்கிய கடன் 1.28 லட்சம் கோடி அமெரிக்க டாலர் ஆகும்.
கொரோனாவுக்காக இதுவரை 3 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் அளவு மதிப்புள்ள நிவாரண உதவிகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த அளவு கடன் பெறுவதாக அந்நாடு விளக்கம் அளித்துள்ளது. இத்துடன் அமெரிக்க அரசின் மொத்தக் கடன் சுமார் 25 லட்சம் கோடி டாலராக உள்ளது.