கோலாலம்பூர் சொந்த சந்தையில் குடிநுழைத்துறை சோதனை

கோலாலம்பூர்: திங்கள்கிழமை (மே 11) அதிகாலை செலாயாங்கில் உள்ள மொத்த விற்பனை சந்தையில் குடிநுழைவுத்துறை  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காலை 10.30 மணியளவில், பல லோரிகள் இப்பகுதியை விட்டு வெளியேறுவதைக் காண முடிந்தது, தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட  இடமாக இப்பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.  காலை 6 மணியளவில் இந்த சோதனை தொடங்கியதாக நம்பப்படுகிறது.

ஊரடங்கு அம்பலில்  இருப்பதால் ஊடகவிலாயாளர்கள் அப்பகுதிக்கு அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், குறைந்தது மூன்று  லோரிகள் காலை 10.30 மணியளவில்  போலீஸ் பாதுகாப்போடு அவ்விடத்தை விட்டு சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here