டாக்கா: பங்ளாதேஷ் காக்ஸ் பசாரில் உள்ள ஒரு மில்லியன் ரோஹிங்யா மக்கள் வசிக்கும் முகாமில் இருவருக்கு கிருமித் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம்களில் இதுவும் ஒன்று. இங்கு மக்கள் மிகவும் நெருக்கமாக வசித்து வருவதால் அதிவேகத்தில் கிருமிப் பரவும் ஆபத்து உள்ளது. கிருமித் தொற்று உள்ள இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 1,900 பேர் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உலகின் ஆகப் பெரிய முகாமில் கிருமி நுழைந்துள்ளதை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால் அந்தக் கிருமியால் பல ஆயிரம் பேர் உயிரிழக்கலாம் என்று பங்ளா தேஷின் ‘சேவ் த சில்ட்ரன்’ அமைப்பின் சுகாதார இயக்குநர் ஷமிம் ஜஹான் எச்சரித்துள்ளார்.