முறையான காரண கடிதம் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

கோம்பாக், மே- 17-

கோம்பாக் டோல் சாவடி வழி வேறு மாநிலங்களுக்கு பயணமாகும் வாகன ஓட்டிகளில் முறையான காரண கடிதம் இல்லாதவர்களை திருப்பி அனுப்பியதாக கோம்பாக் மாவட்ட காவல் துறை தலைவர் ஏசிபி அரிஃபாய் தராவி தெரிவித்தார்.

இந்த டோல் சாவடியில் ஆயிரங்கணக்கான வாகனங்கள் இருந்ததாக சொல்லப்படும் தகவல் உண்மை இல்லை. ஆனால் நேற்று கிட்டத்தட்ட 800 கார் ஓட்டுனர்களிடம் சோதனை நடத்தியதாக அவர் கூறினார்.

அதில் கிட்டத்தட்ட 150 கார்கள் திருப்பி அனுபப்பட்டன. காவல் நிலையத்தின் அனுமதி கடிதம் இல்லாத காரணத்தினாலும் முறையான கரணங்கள் இல்லாத காரணத்தினாலும் அவர்கள் திருப்பி அனுபப்பட்டனர்.

வேறு மாநிலங்களில் பணிப் புரிபவர்கள், கணவன் அல்லது மனைவி வேறு மாநிலத்தில் இருந்தாலோ அனுமதி கடிதத்துடன் மாநிலம் கடக்க அனுமதிக்கப்படுகின்றனர். அதோடு ஏற்றுக் கொள்ளக் கூடும் அவசரமான காரணம் இருப்பவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மாநிலம் கடக்க விரும்பும் மக்கள் அவர்கள் குடியிருக்கும் பகுதியின் காவல் நிலையங்களில் காவல் நிலைய தலைமை அதிகாரியிடம் அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக முக்கிய காரணங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

தெரிந்த அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது, ஏற்றுக் கொள்ள முடியாத காரணங்களுடன் மாநிலம் கடக்க முயல்வது போன்ற செயல்களில் மக்கள் ஈடுபட வேண்டாம் என்று ஏசிபி அரிஃபாய் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here