பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தர் ஆசிரம ஏற்பாட்டில் உதவி

விவேகானந்தர் பொன்மொழிகளுக்கேற்ப ஏழை எளியோருக்கு உதவிட வேண்டும் என்பதனை அனைத்து காலகட்டங்களிலும் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமம் பின்பற்றி வருவதாக ஆசிரமத் தலைவர் டான்ஶ்ரீ அம்பிகை பாகன் தெரிவித்தார்.

வருடந்தோறும் ஆசிரமத்தின் வழி பெருநாட்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால் இவ்வாண்டு கோவிட்-19 தாக்கத்தினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 150 பேரை  அடையாளம் கண்டு ஹரிராயா உதவிகளை வழங்கியதாக அவர் கூறினார். மேலும் சென்ற வாரம் 150 வசதிக் குறைந்தவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற அடிப்படையில் மதம் இனம் பாரமல் அனைவரும் அனைத்து காலகட்டங்களிலும் உதவிகளை வழங்கி வருகிறோம் என்கிறார் டான்ஶ்ரீ அம்பிகை பாகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here