கோவிட் 19 நோய் தொற்றுக்கு இன்று 50 பேர் இலக்காகியுள்ளனர் என்று சுகாதார துறை தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் இஷாம் தெரிவித்தார்.
இது வரை இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 7,059ஆக உயர்ந்திருக்கிறது.
இன்று பதிவான 50 பாதிகப்புகளில் 3 வெளி நாட்டிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். 41 பதிவு அந்நிய நாட்டவர்களுக்கு ஏற்பட்ட தொற்று. அதில் 35 புக்கிட் ஜாலிலில் உள்ள குடிநுழைவுத் துறையில் முகாமிலிருந்து பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
90 பேர் இன்று குணமடைந்திருக்கும் வேளையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,796 ஆக உயர்ந்துள்ளது.