மனமெங்கும் திக் திக்!

ஒரு பயன்பாட்டுக்கருவியைத் தவறாகப் பயன்படுத்திகொள்வது அக்கருவியன் தவறா? அல்லது பயனீட்டாளர் தவறா? இதற்கான பதில் மிகச்சுலபமானது.

கடைக்குசென்று விலையுள்ள பொருளொன்றை வாங்கும்போது அதன் பயன்பாடு கருதியே வாங்கிக்கொள்கிறோம். குறிப்பாக கைக்கு அடக்கமான கத்தியை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அதற்கான பயன்பாடு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அதை கொலைக் கருவியாகப் பயன்படுத்துவது யாருடைய தவறு. அப்படி உருவாக்கிக்கொள்வது யார்?

பாடல், ஆடல், பேச்சு, நகைச்சுவை, தத்துவம் என்பதில் எல்லாம் திறன் கொண்டவர்க்ளுக்கு  திக் தோக் என்ற இணையத்தள செயலி நல்ல களமாக இருக்கிறது. குடும்பப்பெண்களுக்கு நல்ல பொழுதுபோக்கு. மனத்தின் ஆசைகளை வெளிப்படுத்தும் களம் என்றாலும் தவறில்லை. ஆனாலும் எல்லை மீறல் யாருடைய தவறு. கோடரியைத்தூக்கி காலில் போட்டுக்கொளவது தவருதானே! இதற்குப்பெயர் திமிர்.

அடுக்களையில் பயன்படுத்தும் கத்தியாக இருப்பதை மறந்து, கைவிரலை நறுக்குவது யாருடைய குற்றம்? கத்தி வெட்டி விட்டது என்று பழி போடுவது மிகச்சுலபமான வேலை. கத்தியால் வெட்டிக்கொண்டேன் என்றால் கத்தியைத் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாகப் பொருள். இதில் தவறு எங்கிருக்கிறது என்பதற்கு விளக்கம் தேவையில்லை.

திக் தோக் செயலியும் அப்படித்தான். திக் தோக் என்பது ஒரு செயலி மட்டும்தான். தீயதைச் செய்யும்படி அது தூண்டுவதாக எந்த ஆதாரமும் இல்லை. தீயதையும் தீய நபர்களையும் அது உருவாக்குவது அதில் வெளிப்படும் கருத்துகளும் நபர்களின் செயல்களுமே ஆகும்.

பத்து காசு நாணயத்தைச் சுண்டிவிட்டால், இருபது காசு கீழே விழாது. அப்படி விழுந்தால் அது மந்திரம்.  விழும் நாணயம் மறைந்துபோனால் அது தந்திரம். இந்த இரண்டுமே நிஜ வாழ்க்கைக்கு உதவாது.

திக் தோக் செயலியில் எதை விதைக்கிறோமோ அதுதான் முளைக்கும். கூடுதலாகவே திரும்பிவரும்.  இப்போதெல்லாம் இணையத்தொடர்புகளை திருட்டுக்கணக்கில் இயக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். மற்ரவர் உயிருக்கு கேடு விளைக்கும் செயல் இது.  இதனால் பலரின் வாழ்க்கை பறிபோய்க்கொண்டிருக்கிறது.

ஒருவருக்கு மரணம் ஏற்படக்காரணமாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றம். இதைத்தான் பலர் பொழுது போக்கு விளையாட்டாகச்  செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படிச்செய்வற்காக திக் தோக் செயலி செயல்படவில்லை. அதன் செயல்பாட்டைத் தவறாகப் பயன்படுத்தப்படுத்திக்கொண்டால் அது திக் தோக் தவறல்ல.

திக் தோக் சரியாகப் பயன்படுத்தப்பட்டால் அது சிறந்த நண்பனாக இருக்கும். இல்லையேல் உயிருக்கு உலை வைத்துவிடும். இணையத்தள குற்ரப்பதிவில் தவறான நபர்களை விரட்டிப்பிடிக்கும் வேலைய துரிதமாக்குங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை சமுதாயத்துக்கு உதவட்டும்.

திக் தோக் பயனீட்டாளர்களுக்கும் பொறுப்புகள் உண்டு ஆபாசத்தை அடக்கி வாசித்தால் பாசம் உருவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here