புனிதம் போற்றும் மனிதம்

மனிதப்பண்புகள் மகத்தானது என்பதை துன்பத்தில் உணரமுடியும் என்பார்கள். சில வேளைகளில் துன்பம் வரும்போதுதான் மனிதனின் நிறம் தெரியும். இதற்கு விளக்கங்கள் அதிகமிருக்கின்றன.

இங்கே நிறம் என்பது இனத்தின் வேற்றுமையையோ மொழியையோ, நாட்டின் தன்மையையோ பிரதிபலிப்பதாக அமையாது. நிறம் என்பது குணப் பண்பைக் கூறுவதாகக் கொள்ளல் நன்று.

சிங்கையில் கோரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதோனேசியவிலும் கொரோனா தாக்கம் இருக்கிறது. புருணையிலும் இருக்கிறது. துன்பமான நேரம். சுகாதார்ப்போராடாம் உச்சத்தில் இருக்கும் நேரம். பெருநாள் வருவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த நேரத்திலும் பெருநாள் வாழ்த்துகள் கூறும்பண்பு நற்குணத்தின் சான்றாகப் போற்றப்படுகிறது. துன்பமாக இருக்கட்டும்  இன்பமாக இருக்கட்டும் பகிர்வு என்பது பகைமை இல்லா உணர்வைக்கூட்டுவதாக கருதப்படுகிறது.

மலேசியப் பிரதமர், டான்ஶ்ரீ முஹிடின் யாசின், இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, புரூணை சுல்தான் ஹஸ்சனால் போல்கியா, ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் ஆகியோருக்கு நோன்புப்பெருநாள் வாழ்த்து கூறியிருக்கிறார் சிங்கை பிரதமர்.

வழக்கமாகக் கூறும் நோன்புப்பெருநாள் வாழ்த்தாக மட்டும் இது அமையவில்லை. கோரோனா தொற்றின் வீரியத்தை எதிர்த்து நிற்பதற்குக் கைகொடுக்கும் தோழமையாகவும் இவ்வாழ்த்து அமைந்திருக்கிறது.

துன்பம் தரும் கொரோனா ஒரு பக்கம் இருந்தாலும் இன்பம் தரும் வாழ்த்தாக அமைந்திருப்பதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. இதில் சிங்கப்பூர் அதிபர் லீ ஷியென் லூங் முன்னணி வகிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here