64 எம்பி குவாட் கேமராக்களுடன் உருவாகும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் மாடலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
கேலக்ஸி எம்51 மற்றும் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன்களும் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், உற்பத்தியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதன் வெளியீடு தாமதமாகலாம் என கூறப்படுகிறது.
கேலக்ஸி எம்31
புதிய கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 64 எம்பி பிரைமரி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 6.5 இன்ச் சூப்பர் AMOLED ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080×2400 பிக்சல் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6 ஜிபி ரேம், குவாட் கேமரா செட்டப் வழங்கப்படலாம் என தெரிகிறது.
கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனிலும் கேலக்ஸி எம்51 போன்றே 64 எம்பி பிரைமரி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது. கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் 128ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது. சாம்சங் கேலக்ஸி எம்51 மற்றும் எம்31எஸ் மாடல்கள் முறையே SM-M515F மற்றும் SM-M317F மாடல் நம்பர்களில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here