மண்ணுக்கு நிகரேது

செழிப்பாக இருக்க வேண்டும், சீராக நடக்கவேண்டும் என்பது அனைவரின் ஆசையாக இருக்கிறது. அதுபோல நடக்கவேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாக இருந்தால் அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதில் நிறைந்த ஐயப்பாடுகள் இருக்கின்றன.

ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றப்படுவதை அஞ்சல் என்றார்கள். அஞ்சல் மாறி பல பரிணாமங்கள் பெற்றுவிட்டன, அதற்கு வெவ்வேறு பெயர்கள், நிறுவனங்கள் என்று பெயர் மாற்றங்கள் பெற்றுவிட்டன. இது முன்னேற்றத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி. இன்னும் தொடரும்.

மனிதனின் சிந்தனை ஓர் எல்லைக்குள் இருப்பதில்லை. சிந்தனைக்கு விரிவான ஓர் எல்லை கிடையாது. ஆனாலும் அதற்கு வேலியும் கிடையாது. வேலியில்லாத சிந்தனைக்கு கொடுக்கப்படும் வேலை என்ன?

அது செழிப்பாக இருக்க வேண்டும். சீராக இருக்க வேண்டும். புதுமை உலகத்திற்குப் பொறுப்பானதாக இருக்கவேண்டும் என்பதுதானே! அப்படியிருக்கிறதா? இல்லவே இல்லை என்பதற்குச் சான்றுகள் பல கோடிகள் இருக்கின்றன.

கலவியால் உயர்ந்துவிட்டதாக ஒருதரப்பு மார்தட்டிக்கொள்கிறது. வீர்த்தாலும் விவேகத்தாலும் சிறப்படைந்திருப்பதாக பலர் பம்பரமிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

மனிதர்கள் சிறப்பானவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். பாராட்டத்தான் வேண்டும். பாராட்டலாம் என்று மனம் அடித்துக்கொண்டாலும். பாராட்டவேண்டுமா என்று பறுபக்கம் தடுக்கிறது.

பாராட்டுவதற்கு என்ன இருக்கிறது என்பதுதான் பூதாகரமான கேள்வியாக இருக்கிறது. அந்தக்கேள்விக்கு  என்ன பதில் சொல்லப்போக்கிறார்கள்?

கல்வியாளர்கள் கசடறக் கற்கவில்லை. கற்றபின் அதன் வழியில் செல்லவில்லை. கற்றதை வைத்துக்கொண்டு நல்வழி ஏகவில்லை. இன்றைய உலகம் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்குப் பதிலே தேவை இல்லை.

பிறப்பின் நோக்கம் பின்பற்றப்படவில்லை, மனிதம் மறித்துப்போகும் சிந்தனைகளே மலையாய் உயர்ந்துவருகின்றன. மானுட அழிவுகள் மட்டுமே மகுடாபிஷேகம் காண்கின்றன. அப்படியென்றால் மனிதப்பிறவிகளால் என்ன நன்மை. விழித்து எழுந்ததுமே வெறுமையால் விரிந்து கிடக்கும் உலகில் எங்கும் மரண ஓலம்.

மனிதனின் கல்வி மரணத்திற்கானது என்றாகிவிட்டதால் மண்ணாக பிறப்பதே மேல். இறுதி என்பது மண்ணுக்கானதுதானே! அதனால் மண்ணே மகத்தானதாக இருக்கட்டும். மண்ணுக்குள் வாழும் உயிர்களாவது பிழைத்துப் போகட்டும்.

மனிதம் மனிதனை அழித்துக்கொண்டே இருக்கப்போகிறது. அதனால் எமதர்மர்கள் விடுப்பில் செல்ல அனுமதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here