ஆண்டவன் உலகத்தின் முதலாளி

கண்ணுக்குத் தெரியாத காற்று இருப்பதை நம்புங்கள் என்று சொன்னால் கோபம் வரும். இது என்ன முட்டாள்தனமான பேச்சு என்பார்கள் .உரசிச்செல்லும் காற்றை உணராவிட்டால் எப்படி? அது உரசும்போதே காற்று இருப்பது தெரியாதா என்பார்கள்.

இங்கு ஒரு கதை சொல்லலாம் கேட்கத்தயரா?

புதிதாக வீடு வாங்கிய உரிமையாளரைத்தேடி ஒருவர் வந்தார். கடந்த ஒருமாதத்திற்கு மேலாகியும் வாடகை வரவில்லையே! அதுதான் தேடி வந்தேன் என்றார்.

வாடகையா? என்ன வாடகை என்று ஆச்சரியமாகக் கேட்க, காற்றாடி இணைத்திருக்கிறீர்களே அதற்குத்தான் என்றார். காற்றாடி பொருத்தியதற்கும் வாடகைக்கும் என்ன சம்பந்தம் என்று வீட்டு உரிமையாளர் கோபத்துடன் கேட்க, வந்தவரோ கற்றாடி உங்களுக்குச் சொந்தம்., அதிலிருந்துவரும் காற்று எனக்குச் சொந்தம் என்றார். காற்றுக்கு வாடகை வேண்டும் என்பதுதான் வந்தவரின் வாதம்.

காற்றுக்காக காற்றாடி என்பது சரிதான். அதிலிருந்து வரும் காற்று அவருக்கானது அல்ல. அப்படியானால் அந்தக்காற்று, வந்தவருக்கும் சொந்தமானது அல்ல.   காற்றின் உரிமை யாருக்கானது. அதன் உரிமையாளர்தான் யார்?

உரிமையாளர் என்று யாரோ இருக்கிறார். யார் அவர் ?

கோவிட் -19 என்று வந்திருக்கிறது. யார் கண்களிலும் படவில்லை. ஆனால் கண்ணுக்குபுப்படாமலேயே பலரைக் கபளீகரம் செய்துகொண்டிருக்கிறது. இதை நம்புவதற்கு மரணம் காட்டப்படுக்கிறது. மனிதருக்குள்ளே அது எப்படி நுழைகிறது என்றும் கூறப்படுகிறது. சொல்கிறவர் யார்? மருத்துவர் என்பதால் அவர் சொல்வதை நம்புகிறோம்.

சாதாரண மனிதனாக இருந்தால், மாந்தரீகம் என்பார்கள். மருத்துவரோ இதைத்தொற்று என்கிறார். இதில் யார் சொல்வதை நம்புவது என்பதில் குழப்பமில்லை. மருத்துவர் சொல்வது இறைவன் வாக்கு என்பதும் புரிகிறது. நம்பிக்கைக்கு மருத்துவம் சன்றாக இருக்கிறது. எதை யார் சொல்லவேண்டும் என்றும் இருக்கிறது. வேதாளம் வேதம் ஓதக்கூடாது.

இறைவன் இருக்கிறான் என்பது பொதுவிதி. அரசும் உலகமும் இதை நம்புகிறது. உலகம் இன்னும்  வாழ்கிறது என்பது அதற்குச்சான்று. மக்கள் இன்னும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறார்கள். புயல் அடித்தாலும் பூகம்பம் வந்தாலும் இவையாவும் இருக்கின்றன என்பதை அறியவும் புரியவும் வைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் யார்?

இருவித சக்திகள் இணைந்தால் மற்றொன்று பிறக்கும் என்பது தத்துவம். இறை சக்தியும் எதிர்ப்பு சக்தியும் இருந்தால் ஒன்று உருவாகும் அதற்கு மின்சாரம் சான்று. கொரோனா பிறப்புக்கும் இணைவுகள் இருக்கின்றன. கொரோனா என்பதை நம்பும் மனிதன் இறைவனையும் நம்பவேண்டுமல்லவா? மருத்துவர் கொரோனா என்பதை நம்ப வைக்கிறார். இறைவனை நம்ப ஆயிரமாயிரம் உதாரணங்கள் இருக்கின்றன. காற்று நம்ப வைக்குமா?

காற்றாடியால் காற்று இருப்பது உண்மை என்றால். உலகச் சுழற்சியால் இறைவன் காற்றாக இருப்பதும் உண்மைதானே! அதைக் கொரோனா உணர்த்தியிருக்கிறதா? இறைவன் அளித்த கொடைக்கு இன்னும் விடைகாணப்படவில்லை என்பதும் உண்மை. கடவுள் என்றால் பிறகு அவனே ஆண்டவன் என்பதும் புரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here