பாலேக் புலாவ் (பெர்னாமா): எம்சிஓவை மீறி கடையில் அமர்ந்து டூரியான் சாப்பிட்ட டத்தோ உள்ளிட்ட 22 பேருக்கு தலா 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுங்கை பினாங் பகுதியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாலை 6.30 மணியளவில் பழங்களை விற்கும் ஒரு இடத்தில் குழுவாக அமர்ந்து டூரியான் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை கண்டதாக தென்மேற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பிரின்டென்ட் அன்பழகன் தெரிவித்தார்.
போலீசார் வந்தபோது சிலர் தப்பி ஓட முயன்றனர், ஆனால் நாங்கள் அவர்களை மீண்டும் இருக்கையில் அமர கட்டளையிட்டோம். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பெண்கள் உட்பட 21 பேர் அந்தக் குழுவில் இருந்தனர். சிலர் டூரியான் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதில் குழுவில் முக்கிய வணிகர்கள், டத்தோ பட்டம் கொண்ட ஒருவர் ஆகியோரும் இருந்தனர் என்று அவர் கூறினார்.