குடி போதையில் இருந்த வாகனமோட்டியால் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

கோலாலம்பூர்: சுல்தான் இஸ்கந்தர் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை (ஜூன் 1) அதிகாலை குடிபோதையில் வந்த கார்  மோதி 44 வயது ஒப்பந்த தொழிலாளி பலியானார்.

முகமட் ஜெய்லி, தனது மோட்டார் சைக்கிளில் புக்கிட் அந்தாராபங்சாவில் இருக்கும் தனது வீட்டிற்கு செல்லும் வழியில் திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் நிசான் கிராண்ட் லிவினா  வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்தார்.

கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் உதவி ஆணையர்  ஜூல்கிப்ளி யஹ்யா கூறுகையில் மரணமடைந்தவர் தன் மனைவி சமைத்த உணவினை டெலிவரி செய்து விட்டு வீடு திரும்பியவராவார் என்றார்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் மொஹமட் ஜெய்லி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை குற்றவாளி என்று நம்பப்படும் நபர்  2 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் தித்திவங்சா எல்.ஆர்.டி நிலையத்தில் நிறுத்தி இருந்ததாகவும் பொதுமக்கள் வழங்கிய தகவலில் பெயரில் அது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறினார்.

21 வயதான கார் பாகங்கள் விற்பனை கடை ஊழியரான சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு ஜாலான் துன் எச்.எஸ். லீ போக்குவரத்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஏ.சி.பி சுல்கிப்ளி தெரிவித்தார். மேற்கொண்ட சோதனையில் அவர் போதையில் இருந்தார் என்பது தெரியவந்தது. அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here