பக்காத்தான் அரசாங்கம் மிக விரைவில் ஆட்சியைக் கைப்பற்றும் என அமானா கட்சியின் துணைத் தலைவர் சலாஹுடின் அயுப் தெரிவித்துள்ளார்.
புத்ரா ஜெயாவை பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் கைப்பற்றும், அதற்கான சில வியூகங்களை நாங்கள் வகுத்து விட்டோம். பக்காத்தான் ஹராப்பான் சார்பில் நடத்தப்பட்ட கூட்டடத்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டது.
நேற்று முன்தினம் பிற்பகலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டத்திற்கு தாம் தலைமையேற்றதாக முகநூலில் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பதிவேற்றம் செய்திருப்பது குறித்து முன்னாள் விவசாய, விவசாயம் சார்ந்த தொழில் துறை அமைச்சருமான சலாஹுடின் பேசும்போதே மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.
ஜூலை மாதம் நாடாளுமன்றம் கூடுகிறது. அதற்கு முன்னதாகவே அரசாங்கம் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தைஅமைப்பதற்கான பெரும்பான்மை பக்காத்தான் ஹராப்பானுக்கு உள்ளது குறித்து மாமன்னரை சந்தித்து விளக்கமளிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.