3 வயது சிறுமியைத் துன்புறுத்திய வழக்கு: தம்பதியினர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்தனர்!

கோலாலம்பூர்:

கடந்த மாதம் 3 வயது சிறுமிக்கு உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தும் வகையில் அவளைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், கணவனும் மனைவியும் இன்று நீதிமன்றத்தில் தங்களைக் குற்றமற்றவர்கள் என கூறி வாதிட்டுள்ளனர்.

இரவு விடுதி பாதுகாவலராக (Bouncer) பணிபுரியும் ஹம்ஜி அம்னி ஜமாலி (Hamzi Amni Zamali, 40) மற்றும் இல்லத்தரசியான நுரஸ்வானி அகமத் ரோஸ்லி (Nurazwani Ahmad Rosli, 29) ஆகியோர் தமது சொந்த மகளான நுரஸ்வனியை கடந்த மே 23, 2026 அன்று, பண்டார் தாசிக் செலாத்தானில் (Bandar Tasik Selatan) உள்ள ஒரு குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இக்குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு 2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-இன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால்:
அதிகபட்சமாக RM50,000 அபராதம், அல்லது
20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

“முதலாம் குற்றவாளியான ஹம்ஜி அம்னி மீது ஏற்கனவே கற்பழிப்பு, கொள்ளை மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை உள்ளிட்ட பல குற்றப் பின்னணிகள் உள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட சிறுமியை இவர்களுடன் வாழ அனுமதிக்கக் கூடாது” என்று, அரசு தரப்பு வழக்கறிஞர் ரவிந்தேஜித் கவுர் வலியுறுத்தியுள்ளார்.

இன்னிலையில் அரசு தரப்பு இவர்களுக்கு பிணை (Bail) வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. ஒருவேளை பிணை வழங்கப்பட்டால், தலா RM30,000 நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரியது. ஆனால், தங்களுக்கு சொந்த ஊரில் குடும்பத்தினர் இருப்பதாகக் கூறி தம்பதியினர் பிணைத் தொகையைக் குறைக்குமாறு முறையிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சித்தி ஷாகிரா மோஹ்தாருதின் (Siti Shakirah Mohtarudin) தம்பதியினருக்கு தலா RM20,000 பிணைத் தொகை மற்றும் ஒரு ஜாமீன்தாரர் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது.

அத்தோடு மாதத்திற்கு இருமுறை அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று அவர்கள் கையெழுத்திட வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்ட சிறுமியை அவர்கள் நெருங்கக் கூடாது என்றும் கூறிய
இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, ஆவணச் சமர்ப்பிப்பு மற்றும் வழக்கறிஞர் நியமனத்திற்காக ஜூலை 13 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here