தமிழ் சினிமாவில் பொக்கிஷம் படம் மூலமாக அறிமுகம் ஆனவர் பிந்து மாதவி. அதற்கு பிறகு வெப்பம், கழுகு போன்ற படங்களில் நடித்தார் அவர். அதன் பிறகு பிந்து மாதவி நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாகவும் அவருக்கு அதிக புகழ் கிடைத்தது. கடைசியாக சென்ற வருடம் வெளிவந்த கழுகு 2 படத்தில் நடித்து இருந்தார் அவர்.
தற்போது கொரோனா நேரத்தில் படங்களின் ஷூட்டிங் எதுவும் இலை என்பதால் சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே இருந்துவந்தார் பிந்து மாதவி.
சென்னையில் அதிக அளவில் தினம்தோறும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இன்று ஜூன் 1ம் தேதி மட்டும் தமிழ்நாட்டில் 1112 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதில் சென்னையில் உள்ளவர்கள் மட்டும் 964 பேர். இதன் மூலமாக சென்னை நகரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 15770 ஆக உயர்ந்து உள்ளது.
இந்நிலையில் நடிகை பிந்து மாதவி வசித்துவரும் அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த கட்டிடம் முழுவதும் தனிமை படுத்தப்பட்டு உள்ளது. அதனால் பிந்து மாதவி இன்னும் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தான் இருக்க வேண்டும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.