கோவிட்-19 காலத்தில் நடமாட முடியாது, கூடாது என்றார்கள். மக்களும் அதைத்தான் பின்பற்றினார்கள். ஒரு சிலர் மட்டும் சாலைகளில், வீதிகளில் விதிகள் மீறி சிக்கிக் கொண்டார்கள். நீதிமன்றம் சென்று அபராதமும் செலுத்தினார்கள்.
இதைவிட, ஒரு கோவிலே மறைந்துபோய்விட்டது என்பது நம்பமுடியாத செய்தியாக இருந்தாலும் அதுதான் உண்மை என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
ஒரு சினிமாவுக்கான் கதை இருக்கிறது என்றுதான் பொருள் படுகிறது என்றாலும் இது கதை அல்ல. உண்மை. சந்தர்ப்பவாதம்.
மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணையில் கோவில் பூசைகள் வழிபாடுகள் இல்லை என்பதை இந்து மக்கள் பின்பற்றினார்கள். நிர்வாகத்தினரும் ஆலய பக்கம் போவதைக் கட்டுப்படுதிக்கொண்டார்கள். அப்படியிருந்தும் சிற்றாலயம் உடைக்கப்பட்டிருக்கிறது. இது சதியின் வேலையா. சண்டாளர்களின் சூழ்ச்சியா. அத்ற்கும் அப்பால் நிலம் குறுக்கிடுகிறதா?
கமுண்டிங் வட்டாரத்தில் இப்படி நடந்தது ஓர் அதிசயமென்றால் நம்பித்தான் ஆகவேண்டும். இங்கேயும் ஓர் அத்திப்பெட்டி அதிசயமாய் மறைந்திருக்கிறது. எப்படி இது நடந்தது. கும்பல் சதி கும்மாளமிட்டிருக்கிறது. சிவசொத்து குல நாசம் என்பார்களே!
மக்கள் நடமாட்டம் அற்ற நேரத்தில் இப்படியொரு செயல் வெள்ளோட்டம் பார்த்திருக்கிறது. இது விந்தையாக இருக்க முடியாது. இறைவனையே இரவுச்சந்தையில் விலைபேசும் கூட்டத்தின் விரோதச் செயல். விரைவில்ல அம்பலமாகும். பசுத்தோல் போர்த்திய புலியின் வேடம் விரைவில் வெளிவரும்.
நூறு வருடங்கள் பழமையான இந்த ஆலயம் கெமந்தாவில் அருள்பாலித்து வந்திருப்பதாகவும் இவ்வாலயம் சக்தி வாய்ந்த ஆலயமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.
ஆலயத்தை உடைத்த காரணம் யாருக்கும் தெரியவில்லை. அதற்குரிய தண்டனை நிச்சயம் உண்டு. இது சக்தி வாய்ந்த ஆலயம் என்பது அப்போது புரியும். அதே இடத்தில் புதிய ஆலயம் அமையும். அப்போது அரசு சாசனத்தில் இடம் பெறும். அப்போது திமிர் உடைபடும்.
தீமையிலும் நன்மை உண்டு, உப்பைத்தின்றவர்கள் அனுபவிப்பார்கள்.