ஒரு மனிதன் துன்பத்தில் இருக்கும்போது சக மனிதன் உதவ வேண்டியது கடமை – நடிகை நீது சந்திரா

தமிழில் யாவரும் நலம், ஆதி பகவன், சேட்டை, வைகை எக்ஸ்பிரஸ் உள்பட பல படங்களில் நடித்தவர் நீது சந்திரா. கொரோனா ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் பல உதவிகளை அவர் செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு மனிதன் துன்பத்தில் இருக்கும்போது சக மனிதன் உதவ வேண்டியது கடமை. அதனை என்னால் முடிந்த அளவிற்கு செய்து வருகிறேன். கேரளாவில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பதாக அங்கிருந்து ஒருவர் எனக்கு தகவல் அனுப்பினார். அவர் அனுப்பிய தகவலை உறுதி செய்து கொண்டு சுமார் 35 பேர் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here