உலகம் முழுவது ஒரு பில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு திரும்பவில்லை

மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதி செய்த பின்னரே பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.குழந்தைககள் நலமன்றம் (யுனிசெப்) வலியுறுத்தியுள்ளது.

ஆகக் கடைசி நிலவரப்படி, உலகம் முழுவது ஒரு பில்லியன் குழந்தைகள் இன்னும் பள்ளிக்கு திரும்பாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு கல்வி முக்கியம். அதை விட அவர் உயிருடன் இருப்பது மிக முக்கியம் என யுனிசெப் வலியுறுத்தி உள்ளது.

கோவிட் 19 தொற்றுக்கு பின்னர் பள்ளிக்கு திரும்புவது எப்படி இருக்கும்? பெற்றோர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் யாவை என்ற தலைப்பில் யுனிசெப் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கோவிட் 19 பெற்றோர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் அழுத்தம், சவால், புரிதல் வேறு. அவை குழந்தைகள் உலகத்தில் வெவ்வேறக இருக்கும். பள்ளிக்கு மீண்டும் அனுப்புவதற்கு முன்னர் அவர்களை மனரீதியாக தயார் படுத்த வேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்குத் திரும்புவதற்கு முன் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளியில் அவர்கள் இருக்கும் நேரம் மறுபரிசீலனைச் செய்யப்பட வேண்டும். அதற்கு ஈடாக இணைய வழி கல்வி சாத்தியத்தை ஆராய வேண்டும்.

மாணவர்களுக்கான இடைவெளி, உணவுக்கூட தூய்மை என எல்லா அம்சங்களையும் உறுதி செய்துக் கொண்ட பின்னர் மாணவர்கள் பள்ளிக்கு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த ஏற்படுகள் அனைத்தும் மாணவர்கள் வாழும் நாடுகள், அந்தந்த நாட்டில் உள்ள நகர், புறநகர் பள்ளிகள் என அணுகுமுறை மாறும் ஆனால் அடிப்படையில் இன்றைய சூழலில் மாணவர்களின் கல்வி முக்கியம். அவர்கள் உயிருடன் இருப்பது பிரதானம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here