ஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறை

1. சுத்தமான பசுஞ் சாண விபூதி – 1.1/2 கிலோ
2. படிகார பஸ்பம் – 10 கிராம்
3. கல் நார் பஸ்பம் – 10 கிராம்
4. குங்கிலிய பஸ்பம் – 10 கிராம்
5. நண்டுக்கல் பஸ்பம் – 10 கிராம்
6. ஆமை ஓடு பஸ்பம் – 10 கிராம்
7. பவள பஸ்பம் – 10 கிராம்
8. சங்கு பஸ்பம் – 10 கிராம்
9. சிலா சத்து பஸ்பம் – 10 கிராம்
10. சிருங்கி பஸ்பம் – 10 கிராம்
11. முத்துச் சிப்பி பஸ்பம்
12. நத்தை ஓடு பஸ்பம்

இவைகள் அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நன்றாக கலந்து ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது காந்தம் பிடிக்காத எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கவும் . இது சுமார் ஒரு வருட உபயோகத்திற்கு வரும்.
இது பசும்சாணத்தோடு பல ஜீவராசிகளின் உயிர் பஸ்பங்களை முறைப்படி அளவோடு கலந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு ஜீவ பஸ்ப விபூதி என்று பெயர்.

இதனை நீரில் குழைத்து இடும்போது ஒருவித கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே மிகப்பெரிய சக்தியாகும். இதில் உயிர் உள்ள ஜீவ பஸ்பங்கள் சேர்ததிருப்பதால் மிளகுப் பிரமாணம் எடுத்து சாப்பிட உடலில் இருக்கும் நோய் தீரும். மந்திரங்கள் ஜபித்து இடும்போது தொழில் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் தீரும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here