நாங்க மாறிட்டோம்

நாடு வழக்க நிலைக்குதிரும்புகிறது போல் தெரிகிறதே!  அப்படித்தான் கூறுகிறார்கள்.

மக்களுக்குகே நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. கோவிட் தொற்றிலிருந்து விலகியிருக்க முடியம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டர்கள் என்பதும் புரிகிறது.

ஆபத்து என்ற அச்சத்தில்  இருந்த மக்கள் மன இறுக்கத்தோடுதான் நடமாட்டத்தைக் குறைத்துக்கொண்டார்கள். மன இறுக்கம் மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது. இரண்டுக்கும் நடுவே பூதம் ஒன்று கண்ணுக்குத் தெரிவதுபோல் ஒரு மாயை இருந்தது.

இதிலிருந்து விடுபடுவதற்கும் இதோடு சேர்ந்து பயணிப்பதற்கும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டபோது பூதம் நிழலாக மட்டுமே தெரிய ஆரம்பித்தது. பூதத்தைக் கண்டே அசராதவர்கள் நிழலைக் கண்டா நெளியப்போகிறார்கள்.

எல்லாம் பழைய நினைப்புடா பேராண்டி என்ற பாட்டி கதைபோல்,  மூன்றே மாதங்களில்  புதிய நிலைக்கு மக்கள் மாறிவிட்டனர். இனி, பத்து மணி வரைதான் நடமாட்டம் இருக்கும்போல் தெரிகிறது.

ஒருபக்கம் மதுப்பிரச்சினை, இன்னொரு பக்கம் சமூக இடைவெளி பிரச்சினை. இவற்றுக்கெல்லாம் ஈடுகொடுக்க 10 மணிதான் சரியானதாக இருக்கும். கடைகளை 10 மணிக்கே மூடிவிடும் பழக்கத்தால் உணவு பழக்கமும் மாறிவிடும். உடல் பருமன் குறையும். நல்ல தூக்கத்திற்கு நேரம் கிடைக்கும். காலையிலேயே எழுந்து பயிற்சி செய்ய முடியும்.

சுகாதாரம் இயல்பாகவே பழக்கமாகிவிடும். மருத்துவமனைப் படுக்கைகள் காலியாகிவிடும். புதிய பழக்கம் வழக்கமாகிவிடும் வழக்கம் பழக்கமாவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here