வரவு செலவு திட்டம் 2026: நாட்டின் சுற்றுலாத் துறைக்கு RM700 மில்லியனுக்கும் மேலான ஒதுக்கீடு

கோலாலம்பூர்:

நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் RM700 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் அறிவித்தார்.

பிரதமர் தெரிவித்ததாவது, இந்த ஒதுக்கீட்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களான சரவாக் குனுங் முலு தேசியப் பூங்கா, பேராக் லெங்கோங் பள்ளத்தாக்கு மற்றும் சிலாங்கூரில் உள்ள FRIM வனப் பூங்கா ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு RM25 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், Visit Malaysia Year 2026 வெற்றிகரமாக நடத்த RM500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலா பிரச்சாரம், சந்தைப்படுத்தல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய RM60 மில்லியன் ஊக்க நிதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் அன்வார் கூறியதாவது, கலை, கைவினைப் பொருட்கள், பாரம்பரிய நெசவு மற்றும் பாட்டிக் போன்ற துறைகளில் உள்ள தொழில்முனைவோர் வருமானத்தை ஆதரிக்க RM50 மில்லியன், மேலும் மலேசியாவிற்கு சர்வதேச மற்றும் சார்ட்டர் விமானங்களை ஊக்குவிக்க RM50 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில், MAHB (மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்) பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஹாங்காங் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜியாங்சி ஏர் போன்ற 10 சர்வதேச விமான நிறுவனங்களை மலேசியாவிற்கு ஈர்க்க ஏதுவாக அமைந்துள்ளது.

மேலும், மலேசிய சுகாதார சுற்றுலா கவுன்சில் முன்னெடுக்கும் சுகாதார சுற்றுலா திட்டங்களுக்கு RM20 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here