விளையாடுங்கள் – விதிகளை பின்பற்றுங்கள்

அரசாங்கம் அறிவித்த மீட்சியுறும் நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது கும்பலான விளையாட்டுகள், தொடுதல் முறையிலான விளையாட்டுகளை அனுமதி இல்லை என தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.

கால்பந்து, ரஃக்பி, கராத்தே, சிலாட் ஆகிய விளையாட்டுகளை பயிற்சி செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் 5 மீட்டர் சமூக இடைவெளி நிபந்தனையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

அதோடு நீச்சல் குளம் தொடர்பான விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஜூன் 15 தொடங்கி பொதுமக்கள் தொடுதல் முறை இல்லாத உடற்பயிற்சி, விளையாட்டுகளை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. தனி நபர் விளையாடக் கூடிய பேட்மிண்டன், ஓட்டப்பந்தயம், எடை தூக்குதல், 2,4 சக்கர மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், பாராசூட், யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here