திவால் பிரகடனம் இல்லை

நஜிப்பிற்கான  வழக்கறிஞர் விளக்கம்

கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எதிராக இன்னும் திவால் பிரகடனம் செய்யப்படவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் வி யோங் காங் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

உள்நாட்டு வருமான வரி வாரியத்தில் கூடுதலாக வருமான வரி பாக்கியான 1.69 பில்லியன் வெள்ளியைச்  செலுத்தத் தவறியதற்காக அவர் மீது அந்த வாரியம் திவால் நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

திவால் பிரகடனம் நீதிமன்றத்தில் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த வாரியத்தின் வழக்கறிஞர் அதாரி ஃபாரி அமேரி ஹுசெய்ன் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்ட போதிலும் நஜிப்பிற்கு எதிராக திவால் நடவடிக்கை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்று உயர் நீதிமன்ற துணைப் பதிவாளர் ஹிடா ரஹாயு ஷாரிப் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தெரிவித்திருக்கின்றார் என்று வழக்கறிஞர் சொன்னார்.

திவால் பிரகடனம் பதிவு செய்யப்பட வேண்டும் என உள்நாட்டு வருமான வரி வாரியம் செய்து கொண்ட மனுவுக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆன்லைன் மூலமாக இந்த வழக்கு மீதான சீராய்வு நடந்தது. திவால் பிரகடனத்தை ஒத்திவைக்கக் கோரியும் திவால் நோட்டீசைதை் தள்ளுபடி செய்யக் கோரியும் தனது கட்சிக்காரர் மே 24ஆம் தேதிக்கு முன்னதாக மனுவைத் தாக்கல் செய்வார் எனவும் அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here